நான் முதல்வன் திட்ட ஊக்கத்தொகைக்கான மதிப்பீட்டு தேர்வை 801 பேர் எழுதினர்
நான் முதல்வன் திட்ட ஊக்கத்தொகைக்கான மதிப்பீட்டு தேர்வை 801 பேர் எழுதினர்.
நான் முதல்வன் திட்ட ஊக்கத்தொகைக்கான மதிப்பீட்டு தேர்வை 801 பேர் எழுதினர்.
மதிப்பீட்டு தேர்வு
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப்பணிகளுக்கு யு.பி.எஸ்.சி. போட்டித்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் அதிக அளவில் பங்கேற்று வெற்றி பெறும் வகையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 1,000 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.7 ஆயிரத்து 500 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் நான் முதல்வன் போட்டி தேர்வு பிரிவு சார்பில் ஊக்கத்தொகைக்கான மதிப்பீட்டு தேர்வு மாநிலம் முழுவதும் நேற்று நடைபெற்றது.
801 பேர் எழுதினர்
ஈரோடு மாவட்டத்தில் விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வு ஈரோடு கலைமகள் மேல்நிலை பள்ளிக்கூடம், செங்குந்தர் மேல்நிலை பள்ளிக்கூடம், ரெயில்வே காலனி மாநகராட்சி மேல்நிலை பள்ளிக்கூடம், வீரப்பன்சத்திரம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடம் ஆகிய 4 மையங்களில் நடத்தப்பட்டது. இந்த தேர்வை எழுதுவதற்காக 1,275 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
இதில் 801 பேர் தேர்வை எழுதினர். 474 பேர் தேர்வு எழுத வரவில்லை. காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 1 மணிக்கு நிறைவடைந்தது.
இந்த தேர்வை கண் பார்வை குறைபாடுள்ள 4 மாற்றுத்திறனாளிகளும் எழுதினர். அவர்களுக்கு தேர்வு எழுத உதவி செய்வதற்கு ஆசிரியர்கள் (ஸ்கிரைப்) நியமிக்கப்பட்டனர். தேர்வு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.