பத்ரகாளியம்மன் கோவிலில் சித்திரை தேரோட்டம்
மயிலாடுதுறை அருகே நீடூர் பதரகாளியம்மன் கோவிலில் சித்திரை தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கல்ந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மயிலாடுதுறை அருகே நீடூர் பதரகாளியம்மன் கோவிலில் சித்திரை தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கல்ந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பத்ரகாளியம்மன் கோவில்
மயிலாடுதுறை அருகே நீடூர் கிராமத்தில் சிவன் கோவில் கீழ வீதியில் மிகவும் பழமை வாய்ந்த புகழ்பெற்ற ஆலாலசுந்தரி பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு கடந்த மாதம் காப்புகட்டுதலுடன் உற்சவம் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.
சித்திரை தேரோட்டம்
இந்த நிலையில் நேற்று விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம் நடந்தது. இதனை முன்னிட்டு பத்ரகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேருக்கு எழுந்தருளச் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்துச் சென்றனர்.
அப்போது 'ஓம் காளி பத்திரகாளி' என்று முழக்கமிட்டு கொண்டே தேரை வடம் பிடித்து பக்தர்கள் இழுத்துச் சென்றனர். கோவிலின் நான்கு வீதிகள் வழியாக சென்ற தேர் மீண்டும் நிலையை அடைந்தது. அப்போது வீடுகள் தோறும் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.