ஒரே நாளில் 2 கோவில்களில் குடமுழுக்கு


ஒரே நாளில் 2 கோவில்களில் குடமுழுக்கு
x
தினத்தந்தி 11 April 2023 12:15 AM IST (Updated: 11 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கீழ்வேளூர் அருகே ஒரே நாளில் 2 கோவில்களில் குடமுழுக்கு

நாகப்பட்டினம்

சிக்கல்:

கீழ்வேளூர் அருகே செருநல்லூர் ஊராட்சி செம்பியன் ஆத்தூரில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் குடமுழுக்கை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து நேற்று 4-ம் கால யாகசாலை பூஜை மற்றும் கடம் புறப்பாடு நடந்தது. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. அதையடுத்து திரவுபதி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் சிக்கல் அருகே சங்கமங்கலம் கிராமத்தில் உள்ள சாந்தபுரீஸ்வர சாமி கோவிலிலும் நேற்று குடமுழுக்கு நடந்தது.


Next Story