ஒரே நாளில் 2 கோவில்களில் குடமுழுக்கு
மதுக்கூர் அருகே ஒரே நாளில் 2 கோவில்களில் குடமுழுக்கு நடந்தது.
மதுக்கூர்:
மதுக்கூர் அருகே உள்ள பாவாஜி கோட்டை அடைக்கலம் காத்த அய்யனார் கோவிலில் நேற்று குடமுழுக்கு விழா நேற்று நடந்தது. முன்னதாக யாக சாலை பூஜைகள் நடந்தது. இதை தொடர்ந்து கடங்கள் புறப்பாடாகி காலை 10 மணிக்கு கோவில் கோபுரங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்து. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இதேபோல் மதுக்கூர் அருகே நெம்மேலி கிராமத்தில் காமாட்சி அம்மன், கழுவுடையான் சுவாமி, காத்தவராயன் சுவாமி, மற்றும் பரிவார தெய்வங்களுக்கு நேற்று குடமுழுக்கு நடந்தது. முன்னதாக யாக சாலைகள் பூஜைகள் நடந்தது. இதை தொடர்ந்து கடங்கள் புறப்பாடாகி கோவில் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நெம்மேலி கிராம மக்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.