புலம்பெயர் தொழிலாளர் பதிவு முகாம்


புலம்பெயர் தொழிலாளர் பதிவு முகாம்
x
தினத்தந்தி 7 July 2023 12:45 AM IST (Updated: 7 July 2023 12:46 AM IST)
t-max-icont-min-icon

புலம்பெயர் தொழிலாளர் பதிவு முகாம் நடந்தது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம் வர்த்தக சங்க அலுவலகத்தில் தொழிலாளர் நலத்துறை சார்பில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த விவரங்களை பதிவு செய்யும் முகாம் நடந்தது. வேதாரண்யம் வர்த்தக சங்க தலைவர் தென்னரசு முகாமை தொடங்கி வைத்தார். மாவட்ட வர்த்தக சங்க தலைவர் வேதநாயகம், நகை அடகு கடை சங்க தலைவர் குணசேகரன், வர்த்தக சங்க பொருளாளர் சீனிவாசன், துணை செயலாளர் தமிழழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முகாமில் தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர் உத்திராபதி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டு வேதாரண்யம் பகுதியில் உள்ள வர்த்தக நிறுவனங்களில் பணிபுரியும் புலம்பெயர்ந்த வட மாநில தொழிலாளர்கள் குறித்த விவரங்களை பதிவு செய்து கொண்டனர்.


Next Story