குடியிருப்பு உரிமம் வழங்க கோரி குடியேறும் போராட்டம்
குடியிருப்பு உரிமம் வழங்க கோரி குடியேறும் போராட்டம் நடைபெற்றது.
திருச்சி
சோமரசம்பேட்டை, செப்.21-
சோமரசம்பேட்டை அருகே உள்ள நாச்சிகுறிச்சி சபரி நகரில் 65 பேருக்கு அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்கியது. ஆனால் அதற்கு குடியிருப்பு உரிமம் வழங்கவில்லை. எனவே குடியிருப்பு உரிமம் வழங்க கோரி திருச்சி வடக்கு தாராநல்லூர் பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் குடியேறும் போராட்டம் நடத்தினர். இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, 1996-ம் ஆண்டு சோமரசம்பேட்டையில் உள்ள நாச்சிக்குறிச்சி சபரி நகரில் எங்களுக்கு அரசு இலவச வீட்டு மனை பட்டா வழங்கியது, இதுநாள் வரை குடியிருப்பு உரிமம் வழங்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story