ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனங்கள் ஓட்டினால் பறிமுதல்
ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனங்கள் ஓட்டினால் பறிமுதல் செய்யப்படும் எனநாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனங்கள் ஓட்டினால் பறிமுதல் செய்யப்படும் எனநாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பேட்டி
நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நாகை சுற்றுலாத்தலம் என்பதால் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து ஆங்கிலப்புத்தாண்டை கொண்டாட அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள். புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் அத்துமீறல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
குறிப்பாக இளைஞர்கள் ஆபத்தான முறையில் வாகனங்களை இயங்கினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
ரூ.10 ஆயிரம் அபராதம்
மதுபோதையில் வாகன ஓட்டுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும்.இதேபோல் ஓட்டுனர் உரிமம் இன்றி இயக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
மாவட்ட முழுவதும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு 700 போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.ஆங்கிலப்புத்தாண்டு கொண்டாட்டத்தை அசம்பாவிதங்கள் இன்றி கொண்டாட பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
போலீசார் பாதுகாப்பு பணி
மேலும் நாகூர் கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலத்துக்காக வெளி மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.