விதிகளை மீறி இயக்கப்படும் ஆட்டோ பறிமுதல்


விதிகளை மீறி இயக்கப்படும் ஆட்டோ பறிமுதல்
x

விதிகளை மீறி இயக்கப்படும் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விருதுநகர்

சிவகாசி,

விதிகளை மீறி இயக்கப்படும் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பயிற்சி முகாம்

சிவகாசி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு மற்றும் விபத்து தடுப்பு பயிற்சி முகாம் நேற்று காலை நடைபெற்றது.

இதில் சிவகாசி, திருத்தங்கல், வெம்பக்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு மோட்டார் வாகன ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். வட்டார போக்குவரத்து அலுவலர் குமரவேல் கலந்து கொண்டு பேசினர். அப்போது அவர் கூறியதாவது:-

பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றி செல்லும் ஆட்டோக்கள் அரசு விதித்துள்ள விதிமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டும்.

உரிமம் ரத்து

6 குழந்தைகளை மட்டுமே அழைத்து செல்ல வேண்டும். ஓட்டுனர் உரிமம் பெற்றவர் மட்டுமே ஆட்டோ ஓட்ட வேண்டும். வேகமாக சென்றால் அல்லது அரசு உத்தரவை மீறி அளவுக்கு அதிகமாக குழந்தைகளை ஏற்றி செல்வது தொிய வந்தால் அந்த ஆட்டோ பறிமுதல் செய்யப்படும். மேலும் ஆட்டோ டிரைவர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும்.

ஆட்டோக்குரிய அனைத்து ஆவணங்களும் சரியான முறையில் வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story