மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் தொல்லை:கூலித்தொழிலாளிக்கு7 ஆண்டு சிறைத்தண்டனைகிருஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பு


மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் தொல்லை:கூலித்தொழிலாளிக்கு7 ஆண்டு சிறைத்தண்டனைகிருஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பு
x
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித்தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

பாலியல் தொல்லை

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டியை அடுத்த தக்கட்டி காலனியைச் சேர்ந்தவர் திம்மராயன் (வயது 45). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 10.3.2010 அன்று அஞ்செட்டி அருகே உறவினர் வீட்டிற்கு சென்றார். அங்கு அதேபகுதியை சேர்ந்த வாய்பேச முடியாத, காது கேளாத, 3 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை சாக்ெலட் வாங்கி தருவதாக கூறி அவர் அழைத்து சென்றார்.

அப்போது எதிரில் வந்தவர்கள் இது குறித்து கேட்ட போது, சிறுமியை அவரது தாயிடம் அழைத்து செல்வதாக அவர் கூறி சென்றார். அங்குள்ளவர்கள் சந்தேகமடைந்து, பின் தொடர்ந்து சென்று பார்த்த போது சிறுமிக்கு திம்மராயன் பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இது குறித்து சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் திம்மராயனை அஞ்செட்டி போலீசார் கைது செய்தனர்.

7 ஆண்டு சிறை

இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நேற்று நீதிபதி சுதா தீர்ப்பு கூறினார். அதன்படி குற்றம் சாட்டப்பட்ட திம்மராயனுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தார். அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் உமாதேவி மங்களமேரி ஆஜராகி வாதாடினார்.


Next Story