நன்னடத்தை பிணையை மீறியவருக்கு சிறை


நன்னடத்தை பிணையை மீறியவருக்கு சிறை
x

நெல்லையில் நன்னடத்தை பிணையை மீறியவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை மேலப்பாளையம் குறிச்சி அசோகா தெருவைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் தளவாய்குட்டி (வயது 31). இவரிடம் இருந்து ஒரு ஆண்டுக்கு நன்னடத்தை பிணை பெறப்பட்டு இருந்தது. ஆனால் தளவாய்குட்டி நன்னடத்தை பிணையை மீறி குற்ற சம்பவத்தில் ஈடுபட்டதால் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து நிர்வாக செயல் துறை நடுவரான துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் (கிழக்கு) விசாரணை நடத்தி தளவாய்குட்டியை 6 மாதம் 14 நாட்கள் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.


Next Story