நன்னடத்தை பிணையை மீறியவருக்கு சிறை
சேரன்மாதேவியில் நன்னடத்தை பிணையை மீறியவருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
திருநெல்வேலி
சேரன்மாதேவி வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் முருகசெல்வம் (வயது 30). இவரிடம் இருந்து சேரன்மாதேவி 2-ம் வகுப்பு நிர்வாகத்துறை நடுவர் மூலம் ஒரு ஆண்டுக்கான நன்னடத்தை பிணை பெறப்பட்டது. ஆனால் இதனை மீறி குற்ற செயலில் ஈடுபட்டு முருகசெல்வம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து நன்னடத்தை பிணையை மீறி செயல்பட்டதற்காக, சேரன்மாதேவி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபாஷ்ராஜன் சேரன்மாதேவி 2-ம் வகுப்பு நிர்வாகத்துறை நடுவர் பாலசுப்பிரமணியன் முன்பு அறிக்கை சமர்பித்தார். அதன் மீது விசாரணை நடத்திய நடுவர், பிணையை மீறி செயல்பட்ட முருகசெல்வத்தை ஒரு ஆண்டு சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story