நன்னடத்தை பிணையை மீறியவர் சிறையில் அடைப்பு


நன்னடத்தை பிணையை மீறியவர் சிறையில் அடைப்பு
x

நன்னடத்தை பிணையை மீறியவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

திருநெல்வேலி

அம்பை:

கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த இசக்கிபாண்டி (வயது 20) என்பவருக்கு அம்பை இரண்டாம் வகுப்பு நிர்வாகத்துறை நடுவரால், 6 மாதத்திற்கான நன்னடத்தை பிணை பெறப்பட்டது. அதன் பின்பும் அவர் ஆயுதத்தை காட்டி மிரட்டல் விடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஏற்கனவே கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் அடிதடி, திருட்டு மற்றும் கொலை முயற்சி உள்பட 6 வழக்குகள் அவர் மீது உள்ளன. இந்நிலையில் நன்னடத்தை பிணையை மீறி குற்ற செயலில் ஈடுபட்டதற்காக இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, அம்பை இரண்டாம் வகுப்பு நிர்வாகத்துறை நடுவர் முன்பு அறிக்கை சமர்ப்பித்தார். இதன் மீது விசாரணை நடத்திய நடுவர், பிணையை மீறி குற்றம் புரிந்ததற்காக இசக்கி பாண்டியை 3 மாதங்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.


Next Story