ஐ.எம்.எஸ். விற்பனை விழா
பாவூர்சத்திரத்தில் ஐ.எம்.எஸ். விற்பனை விழா நடந்தது.
பாவூர்சத்திரம்:
நெல்லை திருமண்டலம் பாவூர்சத்திரத்தில் சேகர அளவிலான 46-வது இந்திய மிஷனரி சங்கம் (ஐ.எம்.எஸ்.) விற்பனை விழா நடைபெற்றது. பாவூர்சத்திரம் சி.எஸ்.ஐ. கிறிஸ்து ஆலயத்தில் காலையில் நடைபெற்ற ஆராதனையில் ஐ.எம்.எஸ். பொது காரியதரிசி இம்மானுவேல் பொன்னுத்துரை இறை செய்தி வழங்கினார். விற்பனை விழாவை கல்லூரணி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் அருணோதயம் தொடங்கி வைத்தார்.
ஏற்பாடுகளை பாவூர்சத்திரம் சேகர தலைவர் டேனியல் தனசன், ஐ.எம்.எஸ் ஊழியர்கள் டேவிட் லிவிங்ஸ்டன், ஜேசுதுரை, ஜேக்கப் சுந்தர்ராஜ் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். விற்பனை விழாவில் பாவூர்சத்திரம், குரும்பலாப்பேரி, நாகல் குளம், பஞ்சபாண்டியூர், இ.மீனாட்சிபுரம் கருமடையூர், திருவடிதாசபுரம், சீயோன் நகர், குலசேகரப்பட்டி, கீழப்பாவூர் ஆகிய கிளை சபைகளில் இருந்து விற்பனைக்காக பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன.
விற்பனை விழா மூலம் கிடைத்த தொகையினை இந்திய மிஷனெரி சங்க ஊழியங்களுக்கு வழங்கப்பட்டது.