45 நாட்களில் 14 பேர் குண்டர் சட்டத்தில் கைது

45 நாட்களில் 14 பேர் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 16 July 2023 1:00 AM IST (Updated: 16 July 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

கஞ்சா, சாராய கடத்தலில் ஈடுபட்டதாக நாகை மாவட்டத்தில் 45 நாட்களில் 14 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் கூறினார்.

நாகப்பட்டினம்

கஞ்சா, சாராய கடத்தலில் ஈடுபட்டதாக நாகை மாவட்டத்தில் 45 நாட்களில் 14 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் கூறினார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கஞ்சா, சாராயம் கடத்தல்

நாகை மாவட்டத்தில் கஞ்சா, சாராயம் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பான வழக்குகள் மீது தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

14 பேர் கைது

அதன்படி நாகை மாவட்டத்தில் கஞ்சா, சாராயம் கடத்தல், மது விற்பனை உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக கடந்த 45 நாட்களில் 14 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் சென்னை புழல் மற்றும் திருச்சி மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story