புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 தொகுதிகளில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம்


புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 தொகுதிகளில்   அ.தி.மு.க. பொதுக்கூட்டம்
x

அண்ணா பிறந்த நாளையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

புதுக்கோட்டை

அ.தி.மு.க. பொதுக்கூட்டம்

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக முன்னாள் முதல்-அமைச்சரான அண்ணாவின் 114-வது பிறந்தநாளையொட்டி வருகிற 15-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை அ.தி.மு.க. பொதுக்கூட்டங்கள் கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்குட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபெறுகின்றன.

அதன்படி வருகிற 15-ந்தேதி புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை தொகுதியில் நடைபெறும், கூட்டத்தில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டாக்டர். விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ., அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைத்தலைவர் ஜெயச்சந்திரன், வழக்கறிஞர் அறிவானந்தம், தஞ்சை மதியழகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

திருமயம், அறந்தாங்கி

16-ந்தேதி திருமயம் தொகுதியில் நடைபெறும் கூட்டத்தில், மீனவர் பிரிவு இணைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயபால், தஞ்சை மதியழகன், மதுரை தமிழரசன், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் வாரியத் தலைவருமான வைரமுத்து ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

18-ந்தேதி அறந்தாங்கி தொகுதியில் நடைபெறும் கூட்டத்தில், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தாமோதரன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் மேலூர் பெரியசாமி, நேமம் அன்புமுருகன், மதுரை ராஜேந்திரன், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் வாரியத் தலைவருமான வைரமுத்து ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

புதுக்கோட்டை, விராலிமலை, ஆலங்குடி

19-ந்தேதி புதுக்கோட்டை தொகுதியில் நடைபெறும் கூட்டத்தில், அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டாக்டர்.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ., மருத்துவ அணி துணை செயலாளர் டாக்டர். ராமசாமி, மணிவாசகம், செல்வி ருத்ராதேவி ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

20-ந்தேதி விராலிமலை தொகுதியில் நடைபெறும் கூட்டத்தில், அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டாக்டர்.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ., இலக்கிய அணி செயலாளரும், செய்தி தொடர்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வைகைச்செல்வன், மணிவாசகம், கருப்புசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள். 21-ந்தேதி ஆலங்குடி தொகுதியில் நடைபெறும் கூட்டத்தில், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டாக்டர். விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ., சிறுபான்மையினர் நலப்பிரிவு பொருளாளர் ஜான் மகேந்திரன், நெத்தியடி நாகையன், நேமம் அன்புமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story