குடும்ப தகராறில்பெண்ணுக்கு கத்திக்குத்து:கணவர் மீது வழக்குப்பதிவு
பெரியகுளத்தில் பெண்ணை கத்தியால் குத்திய கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தேனி
பெரியகுளம், தென்கரை செயின்ட் சேவியர் தெருவை சேர்ந்தவர் சின்னகருப்பையா. கூலித்தொழிலாளி. இவரது மனைவி பேச்சியம்மாள் (வயது 50). கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த சின்னகருப்பையா, பேச்சியம்மாளை தகாத வார்த்தையால் பேசியதாக தெரிகிறது. மேலும் அவர் தான் வைத்திருந்த கத்தியால் பேச்சியம்மாள் வயிற்றில் குத்திவிட்டு தப்பி ஓடினார். இதற்கிடையே அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் பேச்சியம்மாளை மீட்டு சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தென்கரை போலீசார் சின்னகருப்பையா மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
Next Story