மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய மேலும் ஒருவர் சாவு
குலசேகரன்பட்டினம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய மேலும் ஒருவர் இறந்து போனார்.
தூத்துக்குடி
குலசேகரன்பட்டினம்:
மணப்பாடு மீனவர்காலனியைச் சேர்ந்த ரமேஷ் மகன் ரென்சோ (வயது 29). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த ஜூவன் மகன் எமிலியும்(32) நண்பர்கள். இந்த இருவரும் கடந்த 22-ந்தேதி இரவு மோட்டார சைக்கிளில் குலசேகரன்பட்டினம் சென்றனர். பின்னர் அங்கிருந்து மேட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். குலசேகரன்பட்டினம் அருகே திடீரென நிலைதடுமாறிய மோட்டார்சைக்கிள் விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த ரென்சோ சம்பவ இடத்திலேயே பலியானர். படுகாயமடைந்த எமிலி நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவரும் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story