முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த பெண் `திடீர்' சாவு


முதியோர் இல்லத்தில்  தங்கியிருந்த பெண் `திடீர் சாவு
x

முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த பெண் பரிதாபமாக இறந்தார்

திருநெல்வேலி

தூத்துக்குடி 3-வது மைல் பகுதியைச் சேர்ந்தவர் பால்சுந்தரம் மனைவி விஜயகுமாரி (வயது 60). இவருக்கு காயத்ரி என்ற மகள் உள்ளார். இவருக்கு திருமணமாகி விட்டது. இந்த நிலையில் விஜயகுமாரி நெல்லை புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டு இருந்தார். அங்கு அவருக்கு நேற்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே அவரை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி விஜயகுமாரி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவருடைய மகள் காயத்ரி மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். விஜயகுமாரியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story