ஆதிபராசக்தி பீடங்களில் தீபாவளி பண்டிகை சிறப்பு வழிபாடு


ஆதிபராசக்தி பீடங்களில்  தீபாவளி பண்டிகை சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 26 Oct 2022 12:15 AM IST (Updated: 26 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆதிபராசக்தி பீடங்களில் தீபாவளி பண்டிகை சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

தூத்துக்குடி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தெர்மல்நகர், மேலூர், திருவிக நகர் சக்தி பீடங்கள் மற்றும் வழிபாட்டு மன்றங்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து வழிபாட்டு மன்றங்கள் சார்பில் தீபாவளி சமுதாய பணி நடந்தது. அதன்படி தூத்துக்குடி பிரையண்ட் நகர் 1-வது தெரு நேசக்கரங்கள் இல்லம், நியு நேசக்கரங்கள் முதியோர் இல்லம், சின்னக்கண்ணுபுரம் லூசியா மாற்றுத்திறனாளிகள் பள்ளி, லூசியா பார்வையற்றோர் குடியிருப்பு, கூட்டாம்புளி அன்பு உள்ளங்கள், ராஜீவ்நகர் அன்னை கருணை இல்லம், கதிர்வேல் நகர் ஆன்மாவின் உள்ளங்கள், சிதம்பரநகர் பாசக்கரங்கள் முதியோர் இல்லம், ஆரோக்கியபுரம் தொழுநோய் இல்லம், கீழ அழகாபுரி பவுல் பார்வையற்ற பெண்கள் இல்லம், ட்ரூத்புல் மனநல காப்பகம், மெர்சி பார்வையற்றோர் இல்லம், நரிக்குறவர் குடியிருப்புகள் மற்றும் தெருவோர ஏழை மக்கள் உள்ளிட்ட 1,200 பேருக்கு பலகாரங்களும், 108 பேருக்கு ஆடைகள், போர்வைகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் ஆன்மிக இயக்க மாவட்ட தலைவர் சக்திமுருகன், திரு.வி.க. நகர் சக்தி பீட துணைத் தலைவர் திருஞானம், கோவில்பட்டி மன்ற தலைவர் அப்பாசாமி, புதிய துறைமுகம் மன்ற பொறுப்பாளர்கள் தனபால், பாண்டி, தூத்துக்குடி வட்ட தலைவர் செல்வம், சித்த மருத்துவர் வேம்பு கிருஷ்ணன், உட்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story