இடையர்காடு ஊராட்சியில் சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ ரூ.9 லட்சம் நிதி
இடையர்காடு ஊராட்சியில் சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ ரூ.9 லட்சம் நிதியை கலெக்டர் செந்தில்ராஜிடம் வழங்கினார்.
தூத்துக்குடி
ஏரல்:
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடையர்காடு ஊராட்சி சம்படி காலனியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.45 லட்சம் செலவில் சமுதாய நலக்கூடம் கட்டப்பட உள்ளது. இதற்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. ரூ.9 லட்சம் வழங்குவதாக அறிவித்தார். அதன்படி ரூ.9 லட்சத்திற்கான வங்கி வரைவோலையை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஏரல் பேரூர் தி.மு.க. செயலாளர் ராயப்பன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் சங்கர், பொருளாளர் எடிசன், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயசீலன் துரை, நிர்வாகிகள் அந்தோணி காந்தி, காமராஜ் காந்தி, ஏரல் பேரூராட்சி கவுன்சிலர் ஜவ்பர் சாதிக் மற்றும் இடையர்காடு சம்படி ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story