அய்யனார்குளம்பட்டிபகுதியில்சூதாடிய 7 பேர் கைது
அய்யனார்குளம்பட்டிபகுதியில் சூதாடிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி
ஸ்ரீவைகுண்டம்:
செய்துங்கநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மநாப பிள்ளை தலைமையில் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது செய்துங்கநல்லூர் அருகே உள்ள அய்யனார்குளம்பட்டி பகுதியில் உள்ள அம்மன் கோவில் அருகே அதே பகுதியை சேர்ந்தவர்களான லட்சுமணன் மகன் பூல்பாண்டி (வயது 38), பால்சாமி மகன் பாலகிருஷ்ணன் (40), முருகன் மகன் கண்ணன் (29), இசக்கிமுத்து மகன் பரமசிவன் (39), கணேசன் (58), செய்துங்கநல்லூரை சேர்ந்த இசக்கி மகன் பரமசிவன் (42) மற்றும் ஆறுமுகப்பாண்டி மகன் வடிவேல்முருகன் (34) ஆகிய 7 பேரும் சேர்ந்து பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.11,500 பணம் மற்றும் சீட்டுக்கட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story