ஆலம்பட்டியில் கிறிஸ்தவ ஆலய பிரதிஷ்டை விழா


ஆலம்பட்டியில் கிறிஸ்தவ ஆலய பிரதிஷ்டை விழா
x
தினத்தந்தி 30 Jun 2023 12:15 AM IST (Updated: 30 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆலம்பட்டியில் கிறிஸ்தவ ஆலய பிரதிஷ்டை விழா நடைபெற்றது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே ஆலம்பட்டி தோணுகால் ரோட்டில் இயேசுவே பேழை ஜீவஒளி கிறிஸ்தவ சபை ஆலய பிரதிஷ்டை விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு சபை போதகர் ஏ. அமல்ராஜ் தலைமை தாங்கினார். சபை தலைவர் ஏ. கிறிஸ்டோபர் ஜான் ஜெபம் செய்து ஆலயத்தை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். விழாவில் கிறிஸ்தர இறை மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story