ஆட்டோ-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் டிரைவர் உள்பட 2 பேர் படுகாயம்
காயல்பட்டினத்தில் ஆட்டோ-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் டிரைவர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஆறுமுகநேரி:
காயல்பட்டினம் சிவன் கோவில் தெருவை சேர்ந்த கணபதி மகன் ஹேம்குமார் (வயது 35). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன் தினம் இரவு காயல்பட்டினத்தில் இருந்து ஆறுமுகநேரிக்கு ஆட்டோவில் வந்து கொண்டிருந்தார்.
காயல்பட்டினம் எல்.எப்.ரோட்டில் ஆட்டோ வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே காயல்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்த சண்முகம் மகன் இசக்கிமுத்து( 30) ஓட்டிவந்த மோட்டார் சைக்கிளும், ஆட்டோவும் மோதி விபத்துக்குள்ளாகியது. இதில் ஆட்டோ சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 2பேரும் படுகாயம் அடைந்தனர். இதில் ஹேம்குமார் நாகர்கோவிலில் தனியார் மருத்துவமனையிலும், இசக்கி முத்து திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபுகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.