மின்சாரம் தாக்கியதில் 10-ம் வகுப்பு மாணவன் பலி
கடம்பூர் அருகே மின்சாரம் தாக்கியதில் 10-ம் வகுப்பு மாணவன் பலியானார்.
கயத்தாறு:
கயத்தாறு அருகே ேதாட்டத்தில் இரும்பு துரட்டியில் நுங்கு பறிக்க முயன்ற மாணவன் மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக இறந்து போனான்.
பள்ளி மாணவன்
கயத்தாறு அருகிலுள்ள சங்கராப்பேரி கிராமத்தில் காட்டுநாயக்கன் தெருவில் வசிக்கும் சோலையப்பன் மகன் சுரேஷ்குமார் (வயது16). இவர் பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று 10-ம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகள் வெளியாகிது. இதில் அவன் தேர்ச்சி பெற்றான்.
நொங்கு பறிக்க...
இந்த நிலையில் நேற்று காலை 11 மணியளவில் ஓணமாகுளம் சங்கராபேரி கிராம பகுதியிலுள்ள தோட்டத்தில் நொங்கு பறிக்கு சென்றுள்ளார். பக்கத்து தோட்டத்தில் இருந்த இரும்பு கம்பி துரட்டியால் பனை மரத்தில் இருந்த நொங்கை பறித்தார். அப்போது அருகில் மின்சாரம் கம்பி ஒயரில் எதிர்பாராத விதமாக இரும்பு துரட்டி பட்டுள்ளது.
மின்சாரம் பாய்ந்தது
இதில் மின்சாரம் தாக்கியதில் சுரேஷ்குமார் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸில் கோவில்பட்டி அரசு மருத்துவ மணைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கடம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் சம்பவ பகுதிக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இந்த சம்பவம் நடந்த பகுதிக்கு வருவாய் ஆய்வாளர் பிச்சையா, கிராம நிர்வாக அலுவலர் பரமசிவம் ஆகியோர் சென்று பார்வையிட்டனர்.
போலீசார் விசாரணை
எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்ற நிலையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த அவரது உடலை பார்த்து பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இந்த சம்பவம் குறித்து கடம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.