அந்தியூரில் கருட சேவை ஊர்வலம்


அந்தியூரில் கருட சேவை ஊர்வலம்
x

அந்தியூரில் கருட சேவை ஊர்வலம் நடந்தது.

ஈரோடு

அந்தியூர்

ராமானுஜர் 1006-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு அந்தியூரில் கருட சேவை ஊர்வலம் நடைபெற்றது. இதற்காக அந்தியூர் கோட்டை அழகுராஜா பெருமாள் கோவில், அந்தியூர் திருப்பதி பேட்டை பெருமாள் கோவில், தவுட்டுப்பாளையம் வரம் தரும் வரதராஜ பெருமாள் கோவில், தவுட்டுப்பாளையம் சீனிவாச பெருமாள் கோவில், ஜி.எஸ்.காலனி வரதராஜ பெருமாள் கோவில், மைலம்பாடி சுதர்சன மடம் ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோவில், புரசைக்காட்டூர் கலியபெருமாள் கோவில், பெருமுகை புதூர் சஞ்சீவராயன் பெருமாள் கோவில், பள்ளிபாளையம் கோதண்ட ராமர் கோவில், பிழிகிரிநாயக்கன்பாளையம் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்பசாமி கோவில், வெடிக்காரன்பாளையம் திருமகன் கல்யாண லட்சுமி நாராயண பெருமாள் கோவில் ஆகிய 11 கோவில்களில் இருந்து பெருமாள் உற்சவர் சிலைகள் கருட வாகனத்தில் வைத்து ஊர்வலமாக அந்தியூர் பத்ரகாளி அம்மன் கோவிலுக்கு வந்தன. பின்னர் அங்கிருந்து கருட சேவை ஊர்வலம் சத்தி ரோடு, சிங்கார வீதி, ராஜ வீதி, தேர் வீதி, பர்கூர் ரோடு வழியாக அந்தியூர் கோட்டை அழகு ராஜா பெருமாள் கோவிலை சென்றடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர்.


Next Story