அந்தியூரில் ரூ.57 லட்சத்துக்கு பருத்தி விற்பனை
அந்தியூரில் ரூ.57 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது.
ஈரோடு
அந்தியூர்
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு அந்தியூர், வெள்ளித்திருப்பூர், சென்னம்பட்டி, பர்கூர், கள்ளிப்பட்டி, ஒலகடம், அத்தாணி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 2 ஆயிரத்து 197 மூட்டைகளில் பருத்தியை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இது குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.8 ஆயிரத்து 686-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.11 ஆயிரத்து 89-க்கும் என மொத்தம் ரூ.57 லட்சத்து 18 ஆயிரத்து 470-க்கு ஏலம் போனது. திருப்பூர், கோவை, ஈரோடு, எடப்பாடி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் இங்கு வந்து போட்டி போட்டு பருத்தியை ஏலம் எடுத்துச் சென்றனர்.
Related Tags :
Next Story