அந்தியூரில் போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது


அந்தியூரில் போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது
x

அந்தியூரில் போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டாா்.

ஈரோடு

அந்தியூர்

அந்தியூர் அருகே உள்ள சந்தியபாளையம் மணக்காடு பகுதியை சேர்ந்தவர் திருமூர்த்தி (வயது 26). இவர் கடந்த 2 மாதத்துக்கு முன்பு போதை மாத்திரை மற்றும் போதை ஊசியை ஆன்லைன் மூலம் வாங்கி விற்பனை செய்ததாக அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் அந்தியூர் பஸ் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த திருமூர்த்தியை, போலீசார் கைது செய்தனர்.


Next Story