அந்தியூரில்டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு நாள் கடைபிடிப்பு


அந்தியூரில்டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு நாள் கடைபிடிப்பு
x

அந்தியூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது.

ஈரோடு

அந்தியூர் தவுட்டுப்பாளையத்தில் உள்ள ஈரோடு மாவட்ட பெருந்தலைவர் மக்கள் கட்சி அலுவலகத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 10-வது ஆண்டு நினைவுநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி அவரது உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

நிகழ்ச்சிக்கு ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். அந்தியூர் ஒன்றிய தலைவர் சக்திவேலன், அந்தியூர் நகர செயலாளர் முஸ்தபா ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். மேற்கு மாவட்ட பொறுப்பாளர் ராஜேந்திரன், தென்மாவட்ட நாடார் சங்க தலைவர் மகாதேவன் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு, டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

நிகழ்ச்சியில் அந்தியூர் நகர துணைத்தலைவர் ஜெயகுமார், அம்மாபேட்டை ஒன்றிய தலைவர் காளியப்பன், அந்தியூர் நாடார் சங்க பொறுப்பாளர் லூகாஸ், தமிழ்நாடு நாடார் பேரவை ஒன்றிய பொறுப்பாளர் கனகராஜ் மற்றும் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஈரோடு வடக்கு மாவட்ட துணைத்தலைவர் கேசவராஜ் நன்றி கூறினார்.


Next Story