அந்தியூரில் அதிக பாரம் ஏற்றி வந்த லாரிக்கு அபராதம்
அந்தியூரில் அதிக பாரம் ஏற்றி வந்த லாரிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஈரோடு
அந்தியூர்
அந்தியூர் பஸ் நிலையம் அருகே போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கர்நாடக மாநிலத்தில் இருந்து சேலத்துக்கு வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையின் போது அந்த லாரியில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் அதிகமாக கற்கள் ஏற்றி வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து அளவுக்கு அதிக பாரம் ஏற்றி வந்ததாக லாரிக்கு ரூ.72 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் இரு சக்கர வாகனத்தில் ஹெல்ெமட் அணியாமலும், அதிவேகமாகவும் வந்த 10 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story