அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள வீடுகளில் குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனரா?தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வு


அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள வீடுகளில் குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனரா?தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வு
x

ஈரோடு மாவட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள வீடுகளில் குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனரா? என்று தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள வீடுகளில் குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனரா? என்று தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

குழந்தை தொழிலாளர்கள்

ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) திருஞானசம்பந்தம் தலைமையில், தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள், குறைந்தபட்ச ஊதியச்சட்டம் மற்றும் குழந்தை தொழிலாளர், வளரிளம் பருவ தொழிலாளர்கள் தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல் சட்டங்களின் கீழ் இந்த மாதத்தில் சிறப்பாய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. குறைந்தபட்ச ஊதியச்சட்டத்தின் கீழ் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் தொழில் சம்பந்தமாக குறிப்பாக சினிமா தியேட்டர்கள், கூரியர் சர்வீஸ், செல்போன் ஷோரூம், வாகன உதிரி பாகங்கள் விற்பனை நிறுவனங்கள் என மொத்தம் 33 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்தினை தொழிலாளர்களுக்கு வழங்காத நிறுவனங்கள் மீது ஈரோடு தொழிலாளர் இணை ஆணையாளர் முன்னிலையில் கேட்பு மனு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. குழந்தை தொழிலாளர் மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர்கள் தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல் சட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வீட்டு பணியாளர்களாக குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனரா? என்பது குறித்து தொழிலாளர் உதவி ஆணையாளர் தலைமையில் 19 அடுக்குமாடி குடியிருப்புகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

எச்சரிக்கை

இதுகுறித்து ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) திருஞானசம்பந்தம் கூறும்போது, 'குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதியத்தை வழங்காதது ஆய்வின்போது கண்டறியப்பட்டால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் 16 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட வளரிளம் பருவத்தினர்களை பணிக்கு அமர்த்துவது குற்றமாகும்.

அவ்வாறு பணிக்கு ஈடுபடுத்துவது கண்டறியப்பட்டால் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளர் மீது ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் அல்லது 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்' என்று எச்சரிக்கை விடுத்தார்.


Related Tags :
Next Story