பர்கூர் வனப்பகுதியில்மாடு மேய்க்க சென்ற விவசாயியை யானை மிதித்து கொன்றது


பர்கூர் வனப்பகுதியில்மாடு மேய்க்க சென்ற விவசாயியை யானை மிதித்து கொன்றது
x

பர்கூர் வனப்பகுதியில் மாடு மேய்க்க சென்ற விவசாயியை யானை மிதித்து கொன்றது.

ஈரோடு

அந்தியூர்

பர்கூர் வனப்பகுதியில் மாடு மேய்க்க சென்ற விவசாயியை யானை மிதித்து கொன்றது.

மாடுகள் மேய்க்க....

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதி எப்பத்தான்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அரபுலி (வயது 70). விவசாயியான இவர் 4 மாடுகளும் வளர்த்து வந்தார். அரபுலி மாடுகளை நாள்தோறும் அருகே உள்ள வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு கொண்டு சென்றுவிட்டு மாலையில் வீட்டுக்கு ஓட்டி வருவார். வழக்கம்போல் நேற்று காலை மாடுகளை மேய்ச்சலுக்காக வனப்பகுதிக்கு ஓட்டி சென்றார்.

யானை மிதித்து சாவு

இந்த நிலையில் மாலை 6 மணி அளவில் மாடுகள் மட்டும் வனப்பகுதியில் இருந்து வீட்டுக்கு வந்தன. அரபுலியை காணவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவருடைய உறவினர்கள் வனப்பகுதிக்கு சென்று அவரை தேடி பார்த்தனர்.

அப்போது உடல் நசுங்கிய நிலையில் அரபுலி பிணமாக கிடந்தார். இதுகுறித்து பர்கூர் போலீசாருக்கும், தட்டக்கரை வனத்துறைக்கும் தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அரபுலியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கோரிக்கை

அரபுலி பிணமாக கிடந்த இடம் அருகே யானையின் கால் தடங்கள் பதிவாகியிருந்ததும், மாடுகளை ஓட்டி வரும்போது, அங்கு வந்த ஒரு காட்டு யானை அரபுலியை தாக்கி காலால் மிதித்து கொன்று இருக்கலாம் என்றும் தெரியவந்தது.

இதுகுறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

யானை மிதித்து பலியான அரபுலியின் குடும்பத்துக்கு வனத்துறையினர் உரிய இழப்பீடு பெற்றுத்தரவேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கையையும் விடுத்துள்ளனர்.


Next Story