பர்கூர் வனப்பகுதியில் தேக்கு மரத்தை வெட்டி வீட்டில் பதுக்கிய விவசாயிக்கு அபராதம்


பர்கூர் வனப்பகுதியில்   தேக்கு மரத்தை வெட்டி வீட்டில் பதுக்கிய விவசாயிக்கு அபராதம்
x

பர்கூர் வனப்பகுதியில் தேக்கு மரத்தை வெட்டி வீட்டில் பதுக்கி வைத்த விவசாயிக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.

ஈரோடு

அந்தியூர்

பர்கூர் வனப்பகுதியில் தேக்கு மரத்தை வெட்டி வீட்டில் பதுக்கி வைத்த விவசாயிக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.

ரகசிய தகவல்

அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப்பகுதி தட்டக்கரை வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் தேக்கு மரத்தை வெட்டி ஒருவர் கடத்தி சென்று கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம் ஹனூர் அருகே ஊக்கியம் கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பதுக்கி வைத்து உள்ளதாக வனத்துைறயினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவல் அறிந்ததும் தட்டக்கரை வனச்சரகர் அன்பழகன், வனவர் ரூபன் மற்றும் வனத்துறையினர் கர்நாடக மாநிலம் ஊக்கியம் பகுதிக்கு விரைந்து சென்றனர். மேலும் கர்நாடக மாநில வனத்துறையினர் உதவியுடன் ஊக்கியத்தில் உள்ள ஒருவரின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் 6 அடி நீளம் உள்ள 7 தேக்கு மர சட்டங்கள் இருந்ததை வனத்துறையினர் கண்டுபிடித்தனர்.

அபராதம்

இதைத்தொடர்ந்து வீட்டில் இருந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், 'அவர் அதே கிராமத்தை சேர்ந்த விவசாயியான நாகராஜ் (வயது 39), என்பதும், தட்டக்கரை வனப்பகுதியில் இருந்த தேக்கு மரத்்தை வெட்டி வீட்டுக்கு கடத்தி சென்று பதுக்கி வைத்திருந்ததும்,' தெரியவந்தது.

இதையடுத்து மாவட்ட வன அதிகாரி கவுதம் உத்தரவின்படி தட்டக்கரை வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் தேக்கு மரங்களை வெட்டிய குற்றத்துக்காக நாகராஜுக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். மேலும் அவரிடம் இருந்து தேக்கு மரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story