பவானிசாகர் வனப்பகுதியில் இறந்து கிடந்த புலி
பவானிசாகர் வனப்பகுதியில் புலி இறந்து கிடந்தது.
பவானிசாகர் வனப்பகுதியில் புலி இறந்து கிடந்தது.
அழுகிய நிலையில்...
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட தாளவாடி, ஆசனூர், பவானிசாகர், கேர்மாளம், விளாமுண்டி உள்பட மொத்தம் 10 வனச்சரகங்களில் ஏராளமான வனவிலங்குகள் காணப்படுகின்றன. இந்தநிலையில் பவானிசாகர் வனச்சரகத்துக்குட்பட்ட கொத்தமங்கலம் வனப்பகுதியில் வனச்சரகர் சிவக்குமார் தலைமையில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு புலி ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்தது.
உடல் பாகங்கள்
இதுகுறித்து உடனடியாக சத்தியமங்கலம் புலிகள் காப்பக துணை இயக்குனர் (பொறுப்பு) வெங்கடேஷ் பிரபுவுக்கு வனஊழியர்கள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் துணை இயக்குனர் மற்றும் வனத்துறை டாக்டர் சதாசிவம் ஆகியோர் அங்கு சென்று, இறந்துகிடந்த புலியை பார்வையிட்டனர்.
இதுகுறித்து டாக்டர் சதாசிவம் கூறுகையில் 'இறந்துகிடந்த புலிக்கு 5 வயது இருக்கும்' என்றார். புலியின் உடல் அழுகிய நிலையில் இருந்ததால் அங்கேயே பிரேதபரிசோதனை செய்யப்பட்டு எரியூட்டப்பட்டது. அதற்கு முன்னதாக இறந்த புலியின் உடல் உறுப்பு மாதிரிகள் எடுக்கப்பட்டு, ஐதராபாத் மற்றும் பெங்களூருவுக்கு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆய்வு முடிவுகள் வந்த பிறகே புலி எப்படி இறந்தது என்று தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.