பவானிசாகரில் வேளாண் பணிகளில் ஈடுபட்ட மாணவிகள்


பவானிசாகரில்  வேளாண் பணிகளில் ஈடுபட்ட மாணவிகள்
x
தினத்தந்தி 23 Sep 2022 7:30 PM GMT (Updated: 2022-09-24T01:00:09+05:30)

மாணவிகள்

ஈரோடு

திண்டுக்கல்லை அடுத்துள்ள காந்திகிராம பல்கலைக்கழக பேராசிரியர் ரெங்கநாதன், வேளாண்மை மற்றும் கால்நடை துறை தலைவர் கண்ணன் ஆகியோருடன் இளங்கலை வேளாண்மை பட்டப்படிப்பு இறுதியாண்டு படிக்கும் மாணவிகள் மு.கவியரசி, ம.நதியா ஆகியோர் ஒரு மாதம் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் பல்வேறு விவசாயிகளை சந்தித்தனர். அப்போது அவர்களிடம் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உற்பத்தியை அதிகரிக்கும் முறைகள் குறித்து விளக்கினார்கள்.

மேலும் கால்நடை மருத்துவமனை, பால் கொள்முதல் நிலையங்களின் பயன்பாட்டை மாணவிகள் தெரிந்து கொண்டனர். பவானிசாகர் மண்டல வேளாண் ஆராய்ச்சி நிலையத்தின் ஆய்வு பணிகளை கேட்டறிந்தனர். தொடர்ந்து பல்வேறு வேளாண் சார்ந்த தொழிற்சாலைகளின் செயல்பாடுகள் பற்றியும் கேட்டறிந்தனர்.


Next Story