பவானிசாகரில்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
பவானிசாகரில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
ஈரோடு
பவானிசாகர்
பவானிசாகரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்தவர் பிரபாகரன் (வயது 41). தொழிலாளி. இவர் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் நோய் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த பிரபாகரன் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத போது சேலையில் தூக்குப்போட்டு கொண்டார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு பிரபாகரன் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story