பவானி பகுதியில் 2 மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழை காடையாம்பட்டி ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேறுகிறது


பவானி பகுதியில்   2 மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழை  காடையாம்பட்டி    ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேறுகிறது
x

ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேறுகிறது

ஈரோடு

பவானி பகுதியில் 2 மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது. இந்த மழையால் காடையாம்பட்டி ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேறுகிறது.

கொட்டி தீர்த்த மழை

பவானி, ஊராட்சிக்கோட்டை, மூனுரோடு, ஜம்பை, தளவாய்ப்பேட்டை, காடையாம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 9.30 மணி அளவில் கனமழை பெய்ய தொடங்கியது.

இந்த மழை 2 மணி நேரம் கொட்டி தீர்த்தது. இதனால் பவானியில் அந்தியூர் பிரிவு சாலை, நடராஜபுரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றதால் வேலைக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பி சென்ற வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டனர்.

ஏரி நிரம்பியது

நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் பவானி பகுதியில் 23.7 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதன்காரணமாக பவானி பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் இந்த மழையால் பவானி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அனைத்து ஏரிகளும் நிரம்பி வழிகின்றன. காடையாம்பட்டி பகுதியில் உள்ள காடையாம்பட்டி பெரிய ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டி அதில் இருந்து உபரிநீர் வெளியேறி செல்கிறது.


Next Story