பவானியில்தூக்குப்போட்டு போலீஸ் ஏட்டு தற்கொலை;குடும்ப தகராறு காரணமாக விபரீத முடிவு


பவானியில்தூக்குப்போட்டு போலீஸ் ஏட்டு தற்கொலை;குடும்ப தகராறு காரணமாக விபரீத முடிவு
x

பவானியில் குடும்ப தகராறு காரணமாக தூக்குப்போட்டு போலீஸ் ஏட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஈரோடு

பவானி

பவானியில் குடும்ப தகராறு காரணமாக தூக்குப்போட்டு போலீஸ் ஏட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

போலீஸ் ஏட்டு

நாமக்கல் மாவட்டம், வையப்பமலை பாலமடை குட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 45). இவர் அந்தியூரை அடுத்த பர்கூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி ரேவதி. இவர்களுக்கு கனிஷ்கா (15), நிஷா (10) என 2 மகள்கள் உள்ளனர். ராஜா தற்போது பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் அருகே உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார்.

கடந்த சில நாட்களாக கணவன் மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன்காரணமாக ராஜா மனமுடைந்து நிலையில் இருந்து வந்து உள்ளார். இந்த நிலையில் சிவராத்திரியையொட்டி நேற்று முன்தினம் மனைவி மற்றும் 2 மகள் அந்த பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றதாக தெரிகிறது.

சாவு

இதனால் வீட்டில் யாரும் இல்லை. ஏற்கனவே மனமுடைந்த நிலையில் இருந்த ராஜா, வீட்டில் உள் மின் விசிறி கொக்கியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் ராஜாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.


Next Story