பவானியில் தாசில்தார் வீட்டுக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது
பாம்பு பிடிபட்டது
ஈரோடு
பவானி அண்ணாநகரில் உள்ள மாதா கோவில் பின்புறத்தில் வசித்து வருபவர் கோமதி (வயது 62). இவருடைய கணவர் அர்ஜுனன். ஓய்வு பெற்ற தாசில்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு அர்ஜுனன் இறந்து விட்டார். கோமதி பேரக்குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் அவருடைய வீட்டின் கழிவறையில் பாம்பு ஊர்ந்து சென்றதை பார்த்து கோமதி பயந்து, பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கழிவறையில் இருந்து சுமார் 5 அடி நீளமுள்ள கட்டுவிரியன் பாம்பை லாவகமாக பிடித்தார்கள். பின்னர் வனப்பகுதிக்கு கொண்டு சென்று பாம்பு விடப்பட்டது.
Related Tags :
Next Story