சவலாப்பேரியில் வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு
சவலாப்பேரியில் வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்த வாலிபர் பரிாபமாக இறந்து போனார்.
தூத்துக்குடி
கயத்தாறு:
கயத்தாறு அருகே உள்ள சவலாப்பேரி கீழத்தெருவில் வசித்து வருபவர் வேல்சாமி. விவசாயி. இவரது மகன் கிருஷ்ணசாமி (வயது36). இவர் சம்பவத்தன்று அவரது வீட்டு மொட்டை மாடிக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து கீழே இறங்கும் போது எதிர்பாராதவிதமாக படியில் தடுமாறி விழுந்துள்ளார். இதில் அவரது தலையில் பலத்த காயமடைந்து மயங்கியுள்ளார். குடும்பத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். ஆனால் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று பரிதாபமாக இறந்தார்.
இறந்து போன கிருஷ்ணசாமிக்கு சொர்ணம் என்ற மனைவியும், 3 வயதில் ஒரு குழந்தையும் உள்ளனர். இதுகுறித்து கயத்தாறு போலீசார் சப-்இன்ஸ்பெக்டர் அன்டோனிதீலீப் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story