சென்னிமலையில்தைப்பூச தேர்த்திருவிழாவை முன்னிட்டு வள்ளி கும்மியாட்டம் நிகழ்ச்சி


சென்னிமலையில்தைப்பூச தேர்த்திருவிழாவை முன்னிட்டு வள்ளி கும்மியாட்டம் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 14 Feb 2023 1:00 AM IST (Updated: 14 Feb 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

கும்மியாட்டம் நிகழ்ச்சி

ஈரோடு

சென்னிமலை தைப்பூச தேர் திருவிழாவை முன்னிட்டு தினமும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது. அதன்படி நேற்று முன்தினம் இரவு சென்னிமலை கைலாசநாதர் கோவில் முன்பு பாரம்பரிய கலைக்குழுவினர் சார்பில் வள்ளி கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சென்னிமலை அருகே சொக்கநாதபாளையம், பசுவபட்டி மற்றும் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே ஆலம்பாடி ஆகிய ஊர்களில் உள்ள கலைக்குழுவை சேர்ந்த சிறுவர், சிறுமிகள் மற்றும் பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பாரம்பரிய தமிழ் பாடல்களை பாடி கும்மி ஆட்டம் நடத்தினார்கள்.

கும்மியாட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் சென்னிமலை சுதன் யார்ன்ஸ் உரிமையாளர் கே.சி.சந்திரசேகரன், சென்னிமலை கொங்கு வேளாளர் மெட்ரிக் பள்ளிக்கூட தாளாளர் எம்.எம்.கந்தசாமி ஆகியோர் வாழ்த்தி பரிசுகள் வழங்கினார்கள். கும்மியாட்ட பயிற்சியாளர் கொடுவாய் ரத்தினசாமிக்கு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தனலட்சுமி செந்தில் நினைவு பரிசு வழங்கினார். முன்னதாக எஸ்.பி.தங்கவேல் வரவேற்று பேசினார். முடிவில் ஈரோடு கலா பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.


Next Story