செட்டிகுறிச்சி பஞ்சாயத்தில் புதிய நூலக கட்டிடம் திறப்பு


செட்டிகுறிச்சி பஞ்சாயத்தில் புதிய நூலக கட்டிடம் திறப்பு
x
தினத்தந்தி 13 April 2023 12:15 AM IST (Updated: 13 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

செட்டிகுறிச்சி பஞ்சாயத்தில் புதிய நூலக கட்டிடம் திறக்கப்பட்டது.

தூத்துக்குடி

கயத்தாறு:

கயத்தாறு யூனியனைச் சேர்ந்த செட்டிகுறிச்சி பஞ்சாயத்தில் ராம்தாஸ் நகரில் 15-வது மானிய குழு நிதி திட்டத்தின் கீழ் ரூ.11 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய நூலக கட்டிடம் கட்டப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு கயத்தாறு யூனியன் கவுன்சிலர் கற்பகச் செல்வி கணபதிபாண்டியன் தலைமை தாங்கினார். பஞ்சாயத்து தலைவர் முத்துலட்சுமி கிருஷ்ணசாமி முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் கயத்தாறு யூனியன் தலைவர் எஸ்.வி.எஸ்.பி.மாணிக்கராஜா கலந்துகொண்டு புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாண்டியராஜன், ஐகோர்ட்டு மகாராஜா, யூனியன் மேலாளர் சுப்பையா, ஓவர்சீயர் சிவனு, பஞ்சாயத்து துணைத் தலைவர் வெயிலாட்சி அய்யப்பன், திருமங்களக்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் கருப்பசாமி மற்றும் மகளிர் குழுவினர் உள்பட ஏராளமான பொது மக்களும் கலந்து கொண்டனர்.


Next Story