சின்னமனூர் பகுதியில் வெற்றிலை விளைச்சல் அமோகம்: கிலோ ரூ.250-க்கு விற்பனை
சின்னமனூர் பகுதியில் வெற்றிலை அமோக விளைச்சல் அடைந்துள்ளது. கிலோ ரூ.250-க்கு விற்பனையானது.
தேனி
சின்னமனூர் பகுதியில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல், வாழைக்கு அடுத்தபடியாக வெற்றிலை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இங்கு அறுவடை செய்யப்படும் வெற்றிலையை வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மொத்தமாக கொள்முதல் செய்து வருகி்ன்றனர். இந்நிலையில் இந்த பகுதியில் வெற்றிலை அமோக விளைச்சல் அடைந்துள்ளது. மேலும் கோவில் திருவிழா மற்றும் திருமண விழாக்கள் நடைபெறுவதால் வெற்றிலை விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது சக்கை வெற்றிலை கிலோ ரூ.200-க்கும், வெள்ளை வெற்றிலை ரூ.250-க்கும் விற்பனையாகிறது. இதே விலை நீடித்தால் அழிந்து வரும் நிலையில் உள்ள வெற்றிலை விவசாயம் புத்துயிர் பெறும் என்று விவசாயிகள் கூறினர்.
Related Tags :
Next Story