சித்தோட்டில்மளிகைகடை எரிந்து நாசம்
சித்தோட்டில் மளிகைகடை எரிந்து நாசமானது.
ஈரோடு
பவானி
சித்தோடு தெலுங்கு செட்டியார் வீதியில் அண்ணாதுரை (வயது 55) என்பவர் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். பூட்டப்பட்டு இருந்த இந்த மளிகை கடையில் இருந்து நேற்று அதிகாலை 5 மணி அளவில் புகை வந்தது. சில நிமிடங்களில் தீ பிடித்து எரிய தொடங்கியது. அந்த வழியாக நடை பயிற்சி சென்று கொண்டு இருந்தவர்கள் அதை பார்த்து உடனே பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்கள். அதன்பேரில் நிலைய அலுவலர் ஆறுமுகம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தார்கள். எனினும் கடையில் இருந்த 25 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம் ஆகிவிட்டது. மின்கசிவு காரணமாக குளிர்சாதன பெட்டியில் தீப்பிடித்து அதனால் கடை எரிந்ததாக கூறப்படுகிறது. எனினும் தீயணைப்பு வீரர்கள் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story