சோழவந்தானில், மாட்டு வண்டி பந்தயம்
சோழவந்தானில், மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
மதுரை
சோழவந்தான்,
சோழவந்தான் சட்டமன்ற தொகுதி தி.மு.க. சார்பில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இந்த பந்தயத்தை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில்.கலந்து கொண்ட பெரிய மாடு 9 ஜோடிகள் சோழவந்தானிலிருந்து தேனூர் சேம்பர் வரை 10 கிலோ மீட்டர் தூரமும் மற்றும் சின்னமாடு 20 ஜோடிகள் சோழவந்தானிலிருந்து மேலக்கால் வைகை பாலம் வரை 6 கிலோ மீட்டர் தூரம் என பந்தயம் நடந்தது. பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டு உரிமையாளர்களுக்கு சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ரொக்கபரிசு மற்றும் கேடயங்களை வழங்கினார்.
Related Tags :
Next Story