முன்விரோதத்தில் நடந்த மோதலில் 3 பேர் படுகாயம்


முன்விரோதத்தில்   நடந்த மோதலில்  3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 19 Oct 2022 12:15 AM IST (Updated: 19 Oct 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளத்தில் முன்விரோதத்தில் நடந்த மோதலில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் கணேசன். இவரது குடும்பத்தினருக்கும், சரவணன் என்பவரது குடும்பத்தினருக்கும் இடையே கோவிலுக்கு வரி கொடுப்பது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இப்பிரச்சினை தொடர்பாக நேற்று முன்தினம் இருகுடும்பத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இருத்தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் உதயக்குமார் மனைவி முத்துச்செல்வி (வயது 48), கணேசன் மனைவி மாதாகனி (62), இவரது மகன் இசக்கிமுத்து ஆகியோர் படுகாயமடைந்தனர். உடனடியாக இந்த 3 பேரும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரத்தினராஜ் இருதரப்பையும் சேர்ந்த கணேசன் மகன் கார்த்திக் (26), அவரது சகோதரர் இசக்கிமுத்து, மாதாகனி, ராசாத்தி, சின்னத்துரை மகன் சரவணன், சேர்மத்துரை மகன் சரவணன், ஆறுமுகநயினார் மகன் சின்னத்துரை, உதயகுமார் மகன் ராம்குமார், சரவணன் மனைவி சந்தியா, உதயஜஸ்டின் மகன் ஜோதி முத்து ஆகிய 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் கார்த்திக் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.


Next Story