குன்னூரில்2 கிலோ எடையில் அதிசய நார்த்தம்பழம்-புகைப்படம் எடுக்க பொதுமக்கள் ஆர்வம்
குன்னூரில்2 கிலோ எடையில் அதிசய நார்த்தம்பழம்- புகைப்படம் எடுக்க பொதுமக்கள் ஆர்வம்
நீலகிரி
குன்னூர்
நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்கா பகுதியை சேர்ந்தவர் பிராங்கிளின். இவர் வீட்டில் எலுமிச்சை மற்றும் நார்த்தங்காய் நாற்றுகள் வைத்து வளர்த்து வந்தார். இந்தநிலையில் ஒரு செடியில் காய்த்த நார்த்தம் பழம் ஒன்று சற்று பெரியதாகவே இருந்தது. அந்த பழத்தின் எடை சுமார் 2 கிலோ இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்ததும் அப்பகுதி பொதுமக்கள் அந்த அதிசய பழத்தை ஆச்சரியத்துடன் நேரில் பார்த்து செல்கிறார்கள். மேலும் ஒருசிலர் அந்த பழத்தை புகைப்படம் எடுப்பதோடு செல்பி எடுக்கவும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
Related Tags :
Next Story