கூடலூர் பகுதியில்சொட்டுநீர் பாசனம் மூலம் வாழை சாகுபடி


கூடலூர் பகுதியில்சொட்டுநீர் பாசனம் மூலம் வாழை சாகுபடி
x
தினத்தந்தி 22 Jan 2023 6:45 PM GMT (Updated: 22 Jan 2023 6:45 PM GMT)

கூடலூர் பகுதியில் சொட்டுநீர் பாசனம் மூலம் வாழை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

தேனி

கூடலூர் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக தென்னை மரங்களை அழித்துவிட்டு ஒட்டுரக திசு வாழைகளை சொட்டுநீர் பாசனம் மூலம் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். வாழையில் ஊடுபயிராக வெங்காயம், மல்லி, தக்காளி உள்ளிட்டவற்றை பயிரிட்டு அதிக லாபம் பெற்று வருவதால் பெரும்பாலான விவசாயிகள் வாழை சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். பயிரிடப்பட்ட 6-7 மாதங்களில் வாழை குளை தள்ளும். 11-வது மாதத்தில் தார்கள் வெட்டப்படும்.

வியாபாரிகள் வாழை தோட்ட விவசாயிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் முழுத்தொகையையும் கொடுத்துவிட்டு வாழைத்தார்களை தனித்தனி சீப்புகளாக வெட்டி தண்ணீரில் நனைத்து பெட்டிகளில் அடுக்கி குளிர்சாதன குடோன்களில் வைக்கின்றனர். பின்னர் இந்த பெட்டிகள் குளிர்சாதன லாரிகள் மூலம் சென்னை மற்றும் ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் வாழைத்தார்களை வெட்டியதுடன் அந்த மரங்களும் வெட்டப்படும். பின்னர் அதன் அருகே உள்ள பக்க கன்றுகள் வளர்ச்சி அடைந்து மறுபலன் தரும். இதனால் விவசாயிகள் வாழை சாகுபடியில் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர்.


Related Tags :
Next Story