கூடலூர் பகுதியில் கம்பு பயிர் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி


கூடலூர் பகுதியில்  கம்பு பயிர் விளைச்சல் அமோகம்:  விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 13 Nov 2022 12:15 AM IST (Updated: 13 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் பகுதியில் கம்பு பயிர் அமோக விளைச்சல் அடைந்துள்ளது.

தேனி

கூடலூர் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தையொட்டிய ஏகலூத்து, கல் உடைச்சான் பாறை, பெருமாள் கோவில் புலம், கழுதைமேடு உள்பட பல்வேறு பகுதிகளில் மானாவாரி நிலங்களில் விவசாயிகள் ஒட்டுரக கம்பு பயிர்களை சாகுபடி செய்துள்ளனர்.

இப்பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த வடகிழக்கு பருவ மழையினால் கம்பு பயிர்கள் நன்கு வளர்ந்து கதிர்கள் தள்ளிய நிலையில் உள்ளது. சில இடங்களில் கதிர்கள் நன்கு முற்றி அறுவடைக்கு தயாராக இருந்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் கம்பு கதிரில் புழுக்கள் தாக்குதலை தடுக்க விவசாயிகள் பூச்சிமருந்து தெளித்து வருகின்றனர். கால்நடை, கோழிகளுக்கு தீவனமாக கம்பு பயிர் பயன்படுத்துவதால் கம்பு பயிருக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. உள்ளூர் வியாபாரிகள் மொத்தமாக வாங்கி இருப்பில் வைத்து கொண்டு கூடுதல் விலைக்கு விற்பனை செய்கிறார்கள்.

இதேபோல் பால்மாடுகள் வளர்ப்பவர்களும் தங்கள் மாடுகளுக்கு தேவையான கம்பு பயிர்களை வாங்கி வெயிலில் உலர வைத்து மாவாக அரைத்து வைத்து கொள்கின்றனர். இதனால் கம்பு பயிருக்கு எப்போதும் கிராக்கியாகவே இருக்கும். கடந்த ஆண்டைவிட தற்போது கம்பு விளைச்சல் அமோகமாக இருப்பதால் மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Related Tags :
Next Story