கூடலூர் பகுதியில்கம்பு பயிர் விளைச்சல் அமோகம்


கூடலூர் பகுதியில்கம்பு பயிர் விளைச்சல் அமோகம்
x

கூடலூர் பகுதியில் கம்பு பயிர் அமோ விளசை்சல் அடைந்துள்ளது.

தேனி

கூடலூர் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தையொட்டிய மானாவாரி நிலங்களில் விவசாயிகள் ஒட்டுரக கம்பு பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். இந்த பகுதிகளில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கன மழை பெய்தது. இதன் காரணமாக கம்பு பயிர்கள் நன்கு வளர்ந்து கதிர்கள் தள்ளிய நிலையில் உள்ளன. சில இடங்களில் அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. கால்நடைகள், கோழிகளுக்கு தீவனமாக கம்பு பயிர் பயன்படுத்துவதால் கம்பு பயிருக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. உள்ளூர் வியாபாரிகள் மொத்தமாக வாங்கி இருப்பில் வைத்து கொண்டு கூடுதல் விலைக்கு விற்பனை செய்கிறார்கள்.

இதேபோல் பசு மாடுகள் வளர்பவர்களும் தங்களுக்கு தேவையான கம்பு பயிர்களை வாங்கி வெயிலில் உலர வைத்து மாவாக அரைத்து வைத்துக்கொள்கின்றனர். இதனால் கம்பு பயிருக்கு கிராக்கியாகவே உள்ளது. கடந்த ஆண்டைவிட தற்போது கம்பு விளைச்சல் அமோகமாக இருப்பதால் மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story