கடலூர் மாவட்டத்தில் 68 பேர் வேட்புமனு தாக்கல்


கடலூர் மாவட்டத்தில் 68 பேர் வேட்புமனு தாக்கல்
x

காலியாக உள்ள பதவிகளுக்கான இடைத்தேர்தலில் கடலூர் மாவட்டத்தில் 68 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

கடலூர்

கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்-1, ஊராட்சி மன்ற தலைவர்கள் -4, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்-26 ஆகிய 31 பதவி இடங்களை நிரப்புவதற்கான இடைத்தேர்தல் கால அட்டவணையை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் வெளியிடப் பட்டுள்ளது.

இதையொட்டி கடந்த 20-ந் தேதி முதல் இன்று வரை வேட்புமனு தாக்கல் தொடங்கியது. தினசரி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்பாளர்கள் மனுதாக்கல் அளித்து வந்தனர். அதன்படி மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 8 பேரும், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 17 பேரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 43 பேரும் என மொத்தம் 68 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். இதில் வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாளான நேற்று மட்டும் 36 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுக்கள் மீதான பரிசீலனை நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. வியாழக்கிழமை பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனுக்களை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். தேர்தல் வாக்குப்பதிவு 9.7.2022 அன்று காலை 7 மணி முதல் மாலை 6 வரை நடைபெறுகிறது. மேலும் வாக்கு எண்ணிக்கை 12.7.2022 அன்று நடைபெற உள்ளது.


Next Story